அறிமுகம் – About

English   |   中文   |   Malay   |   தமிழ்
ஆசியப் படைப்பிலக்கியத் திட்டமானது, சிங்கப்பூர் தேசியக் கலை மன்றம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் ஹ்யூமனிட்டியின் நிதியுதவியைக் கொண்டு செயல்படும் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.

சர்வதேச முன்னணி மற்றும் உள்ளூர் எழுத்தாளர்களைச் சிறப்பு எழுத்தாளர்களாக, படைப்பிலக்கியத்திற்கான பயிற்சிப் பட்டறைகள் மற்றும் முதன்மை வகுப்புகள் மூலம் கற்பிக்கவும் மற்றும் சிங்கப்பூரில் வளர்ந்து வரும், வளர்ந்து கொண்டிருக்கும் மேம்பட்ட எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நோக்கம் மற்றும் குறிக்கோள்கள்

கீழ்கண்டவற்றின் மூலம் படைப்பிலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதே எங்கள் நோக்கம்:

  • சிங்கப்பூருக்குள்ளேயும், பிராந்தியம் முழுவதிலும் உள்ள எழுத்தாளர்களின் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் ஆழமான கலாச்சார புரிதலை ஏற்படுத்துதல்.

திட்டத்தின் நோக்கங்கள்:

  • சிங்கப்பூர் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தேசியக் கல்விக் கழகம் ஆகியவற்றில் நம்பிக்கையளிக்கும் வளரும் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துதல்.
  • சிறப்பு வளர்ச்சித் திட்டங்களை வழங்கி படைப்பிலக்கியத்திற்கான பயிற்சியை மேம்படுத்துவதன் மூலமாக சிங்கப்பூரில் தற்போதுள்ள இலக்கியத் திறமைக்கு ஆதரவளித்தல்.
  • சிங்கப்பூரின் அதிகாரபூர்வ மொழிகளான நான்கு மொழிகளிலும் (மாண்டரின், ஆங்கிலம், மலாய், தமிழ்) எழுதும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான கலாச்சார புரிதல் மற்றும் பரிமாற்றங்களை ஊக்குவித்தல்.

 

வரலாறு

2011-ஆம் ஆண்டு முதல், தேசியக் கலை மன்றம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன்  இணைந்து சிங்கப்பூர் எழுதும் குடியிருப்பாளர் நிகழ்ச்சிகளை நடத்துக்கிறது.

சிறந்த நிலைப்பாட்டிலுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்கள் ஸ்கூல் ஆஃப் ஹ்யூமனிட்டிக்குள்ளேயே (முன்பு ஸ்கூல் ஆஃப் ஹியூமனிட்டீஸ் அண்ட் சோஷியல் சயின்சஸ் என அறியப்பட்டது) படைப்பிலக்கியத்தை எழுதவும் கற்பிக்கவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

2019-இல், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஹியூமனிட்டீஸ் மற்றும் தேசியக் கலை மன்றம் இடையே உறவை மேலும் வளர்த்து ஆசியப் படைப்பிலக்கியத் திட்டத்தைத் தொடங்க ஒப்புக்கொண்டன.

சிங்கப்பூரின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளான மாண்டரின், ஆங்கிலம், மலாய் மற்றும் தமிழ் ஆகியவற்றில் சிங்கப்பூர் முழுவதும் பணிபுரியும் எழுத்தாளர்களை உருவாக்குவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் ஏற்கனவே இருந்த ரைட்டிங் இன் ரெசிடென்சி திட்டங்களை மேம்படுத்தி ஆசியப் படைப்பிலக்கியத் திட்டமானது உருவாக்கப்பட்டுள்ள.