Suneel Krishnan

Residency Period
11 September to 1 December 2023

Dr Suneel Krishnan is an esteemed writer, translator, critic, essayist and editor of Tamil language fiction who has presented at workshops and festivals in India, Malaysia and Singapore.

He has written short stories and novels including Ambu Padukkai (2018), Vishakkinaru (2020) and Neelakantam (2020). 

He has also translated works including Hindu Gnanam Oru Eliya Arimugam by Kshiti Mohan Sen,  Sudanthiramum Samuganeedhiyum by Rajmohan Gandhi,  Mahathmavuku Anjali for Tributes inn Radio, and Sathiyathudanana Sodhanaigalin Kadhai (upcoming 2023), a translated version of the critical annotated edition of Gandhi’s Autobiography, edited by Tridip Suhrud. He has written two books on literary criticism: ‘Samakala Sirukadhaigalin Parinamam’ critical essays on short storie, and ‘Valaroli’ an anthology of critical essays and interviews. 

He has also edited Anthologies including Gandhi Ellaigaluku Appal (2012),  a book of translated Articles on Gandhi, Pinnavinathuva vadhiyin Manaivi – Selected stories of Sureshkumara Indrajith (2019), Gandhiyai Sumapavargal (2021) and Mahathma Gandhi in Tamil – An anthology (Bharatiya Vidya bhavan 2022). 

Among the awards and recognition he has received include the 2018 Sahitya Akademi Yuva Puraskar award for his short story collection ‘Ambu Padukkai’, the 2018 Kanaiyazhi Ezhuthu Kuru novel competition ‘Asokamithran’ prize for his novella ‘Pesum Poonai’, the Ka Na Su short story award for ‘Eppodhum Mudivele Inbam’ in 2020 and the “அறச்செம்மல்” award given by Erode Aram Arakatalai.

He has also participated in various television discussion programs, delivered lectures and talks in relation to Tamil Modern literature in various educational institutions and forums, and participated in literary festivals such as Gateway litfest, Mumbai, International Litfest at Shimla, organised by Sahitya Akademi, and the Singapore Writers’ festival. Further he is an editor of a website in Tamil dedicated to articles on Gandhi, Gandhian thoughts and Gandhians– www.gandhitodaytamil.com,  one of the editors of Tamil literary ezine ‘Padhakai’, and one of the editors of tamil.wiki. He was also one of the judges for The 2019 Golden Point Tamil language short story competition in Singapore and a judge for the Singapore literary prize fiction in Tamil in 2022. He is a member of the Academic Council of Srimath Andavar College of Arts and Science, Srirangam.

He is currently an Ayurvedic Physician and Chief consultant at Kotakkal Arya Vaidya Sala, Karaikudi, India.

Awards

  • 2018: Kanaiyazhi Ashokamithran novella award – For Pesum Poonai (Talking Cat)
  • 2018: Sahitya Akademi Yuva Puraskar award for Young Writers – For Ambu Padukkai (Bed of Arrows) short story collection
  • 2020: Ka Na Su short story award – Eppodhum Mudivile Inbam (Pleasure Always at the End)

மதிப்புக்குரிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் தமிழ் மொழி புனைகதைகளின் பதிப்பாசிரியராகிய டாக்டர் சுனில் கிருஷ்ணன்,  இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயிலரங்குகளிலும் விழாக்களிலும் படைத்துள்ளார்.

‘அம்புப்படுக்கை’ (2018), ‘விஷக் கிணறு’ (2020) மற்றும் “நீலகண்டம்’ (2020) இவர் எழுதிய சிறுகதைகள் மற்றும் நாவல்களில் அடங்கும்.

இவரது மொழிபெயர்ப்புப் பணிகளில் பின் வருபவை அடங்கும் – க்ஷிதி மோகன் சென்னின் ‘இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம்’, ராஜ் மோகன் காந்தியின் ’சுதந்திரமும் சமூகநீதியும்’, வானொலி அஞ்சலிகள் – ’மகாத்மாவுக்கு அஞ்சலி’  மற்றும் டரிடிப்  ஸுருத்தால் தொகுக்கப்பட்டு உரை விளக்கம் கொண்ட காந்தியின் சுயசரிதையின் தமிழாக்கம் ‘சத்தியத்துடனான  சோதனைகளின்  கதை’ (2023இல் வெளிவர விருக்கிறது). இலக்கிய விமர்சனம் பற்றி இவர் இரு நூல்கள் எழுதியுள்ளார்: சிறுகதைகள் பற்றிய விமர்சன கட்டுரைகள் ‘சமகால சிறுகதைகளின் பரிணாமம்’, விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்பு, ‘வளரொளி’.

‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ – காந்தியைப் பற்றிய மொழியாக்கக் கட்டுரைகள் (2012), ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ – சுரேஷ்குமார இந்திரஜித்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2019), “காந்தியைச் சுமப்பவர்கள்’ (2021) மற்றும் “மஹாத்மா காந்தி தமிழில் – ஒரு தொகுப்பு’ (பாரதிய வித்தியா பவன்), இவர் தொகுத்த தொகை நூல்களில் உள்ளடங்கும்.

‘அம்புப்படுக்கை’ சிறுகதை தொகுப்பிற்கு 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி யுவ புராஸ்கார் விருது, ‘பேசும் பூனை’ குறுநாவலுக்கு 2018 ஆம் ஆண்டு கணையாழி எழுத்து குறுநாவல் போட்டி அசோகமித்திரன் பரிசு, ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதைக்கு 2020 இல் க.நா.சு சிறுகதை பரிசு மற்றும் ஈரோடு  அறம்  அறக்கட்டளை  வழங்கிய அறச்செம்மல் விருது போன்ற பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் இவர் பெற்றுள்ளார்.

மேலும் இவர் பல்வேரு தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்;  தமிழ் நவீன இலக்கியம் பற்றி பல கல்விக் கழகங்களில் அரங்கங்களிலும் உரையாற்றியுள்ளார்; மும்பையில் நடைபெறும்  ‘கேட்வெய்’ இலக்கிய விழா, சாகித்திய அகாதமி சிம்லாவில் ஏற்பாடு செய்த அனைத்துலக இலக்கிய விழா,  சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விழா போன்ற இலக்கிய விழாக்களில் பங்கேற்றுள்ளார்.

அதற்கும் மேல், காந்தி பற்றிய எழுத்துக்கள்,  காந்திய எண்ணங்கள் மற்றும் காந்தியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தமிழ் இணையப்பக்கத்தின் ஆசிரியராவார் – www.gandhitodaytamil.com;

‘பதாகை’ தமிழ் இலக்கிய இணைய இதழ் ஆசிரியர்களில் ஒருவர்; தமிழ் விக்கி ஆசிரியர்களில் ஒருவர்.   2019 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற தங்க முனை தமிழ் மொழி சிறுகதை போட்டியின் நடுவராகவும், 2022 இல் சிங்கப்பூர் இலக்கிய பரிசு தமிழில் புனைகதைப் போட்டியின் நடுவராகவும் இருந்தார்.   இவர் ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை & அறிவியல் கல்லூரியின் கல்வி சபையின் உறுப்பினர்.

தற்சமயம் இவர் கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை, காரைக்குடி, இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவர் மற்றும் தலைமை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

விருதுகள்

  • 2018: கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் பரிசு – ‘பேசும் பூனை’ குறுநாவலுக்கு
  • 2018: இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதமியுவ புராஸ்கார் விருது – ‘அம்புப்படுக்கை’ சிறுகதை தொகுப்பிற்கு
  • 2020: க.நா.சு சிறுகதை பரிசு – ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதைக்கு

Courses & Events

 

Date / Venue Programme Activities

2 sessions on:

  • 23 & 30 September 2023, Saturday
  • 9am to 12pm SGT

(Foundation to Intermediate)

தமிழில் அறிவியல் புனைகதை – ஓர் அறிமுகம் (பயிலரங்கு)

இவ்விரு கருத்தரங்குகளில் தமிழில் அறிவியல் புனைகதை எழுதுவதைப் பற்றி எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தகவல் நிறைந்த ஒரு அறிமுகம் வழங்குகிறார் டாக்டர் சுனில் கிருஷ்ணன். இப்பயிலரங்கு தமிழ் மொழியில் வழி நடத்தப்படும்.

பாடக் குறியீடு: SK1

An Introduction to Science Fiction in Tamil (Seminar)

In these two seminars, Dr Suneel Krishnan provides an informative seminar introducing Tamil science fiction writing to writers and readers in Singapore. This course will be conducted in the Tamil language.

Course code: SK1

More information here

2 sessions on:

  • 7 & 14 October 2023, Saturday
  • 9am to 12pm SGT

(Foundation to Intermediate)

 

தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு இலக்கிய விமர்சனம் பட்டறை

இரு வாரம் நீடிக்கும் இந்த அடிப்படைநிலை முதல்  இடைநிலை பாடத்தில் டாக்டர் சுனில் கிருஷ்ணன் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு தமிழில் விமர்சனம் எழுத, தகவல் நிறைந்த, ஊக்கமளிக்கும் ஒரு பட்டறையை வழங்குகிறார். இப்பட்டறை தமிழ் மொழியில் வழி நடத்தப்படும்.

பாடக் குறியீடு: SK2

Literary Criticism for Tamil Language Writers Workshop

In this two-week Foundation to Intermediate course, Dr Suneel Krishnan offers an encouraging and informative workshop to help developing writers write literary criticism in the Tamil language. This course will be conducted in the Tamil language.

Course code: SK2

More information here

2 sessions on:

  • 28 October & 4 November 2023, Saturday
  • 9am to 12pm SGT

(Foundation to Intermediate)

 

தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு குறுங்கதைப் பட்டறை

இரு வாரம் நீடிக்கும் இந்த அடிப்படைநிலை முதல்  இடைநிலை பாடத்தில் டாக்டர் சுனில் கிருஷ்ணன் வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் தமிழில் குறுங்கதைகள் எழுதுவதற்கு, தகவல் நிறைந்த, ஊக்கமளிக்கும் ஒரு பட்டறையை வழங்குகிறார். இப்பட்டறை தமிழ் மொழியில் வழி நடத்தப்படும்.

பாடக் குறியீடு: SK3

Micro Fictions for Tamil Language Writers Workshop

In this two-week Foundation to Intermediate course, Dr Suneel Krishnan offers an encouraging and informative workshop to help developing writers write micro fictions in the Tamil language. This course will be conducted in the Tamil language.

Course code: SK3

More information here

 

1 session on:

  • 11 November 2023, Saturday
  • 9am to 12pm SGT

(Foundation to Intermediate)

தமிழில் வரலாற்றுப் புனைகதைகள் (பயிலரங்கு)

தமிழில் வரலாற்றுப் புனைகதை எழுதுவதைப் பற்றி சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தகவல் நிறைந்த ஒரு பயிலரங்கை படைக்கிறார் டாக்டர் சுனில் கிருஷ்ணன். இப்பயிலரங்கு தமிழ் மொழியில் வழி நடத்தப்படும்.

பாடக் குறியீடு: SK4

Historical Fiction in Tamil (Seminar)

Dr Suneel Krishnan provides an informative seminar on Tamil Historical Fiction to writers and readers in Singapore. This course will be conducted in the Tamil language.

Course code: SK4

More information here

 

2 sessions on:

  • 21 October 2023, Saturday
  • 29 October 2023, Sunday
  • 9am to 12pm SGT

(Foundation to Intermediate)

தமிழ் சிறுகதை மற்றும் அறிவியல் புனைகதை ஆங்கில மொழி எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் (பயிலரங்கு)

சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் தமிழ் சிறுகதை மற்றும் அறிவியல் புனைகதை பற்றிய தகவல் நிறைந்த ஒரு பயிலரங்ககைப் படைக்கிறார் டாக்டர் சுனில் கிருஷ்ணன்.  இப்பயிலரங்கு ஆங்கில மொழியில் வழி நடத்தப்படும்.

பாடக் குறியீடு: SK5 & SK6

Tamil Short Stories & Science Fiction for English Language Writers & Readers (Seminar)

Dr Suneel Krishnan provides an informative seminar on Tamil Short Stories & Science Fiction to writers and readers in Singapore. This course will be conducted in the English language.

Course code: SK5 & SK6

More information here

 

September to November 2023
(by appointment)

In-person or Online (Zoom)

(For Foundation, Intermediate to Advanced Writers)

நேருக்கு நேர் – எழுத்தாளர்களிடேயே சந்திப்பு

உங்கள் எழுத்துத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாட, பல விருதுகளை வென்ற, டாக்டர் சுனில் கிருஷ்ணன்  நடத்தும் தனிநபருக்கான வழிகாட்டும் அமர்வுக்குப் பதிவு செய்துகொள்ளுங்கள்.  டாக்டர் கிருஷ்ணனின் வழிகாட்டுதல் மூலம் உங்கள் படைப்புச் செயல்பாட்டுக்கு வேண்டிய உதவியையும் உங்கள் எழுத்து வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஆதரவையும் நீங்கள் பெறுவீர்.

பாடக் குறியீடு: SK10

Writer to Writer

Book a one-on-one mentoring session with award winning writer, Dr Suneel Krishnan, to discuss your writing project. Dr Krishnan will provide guidance to help your creative practice and support your writing life.

Course code: SK10

More information here

 

Publications